நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்கிறார் நீதியமைச்சர்
கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலையின் சந்தேக நபரை ஊடகங்கள் முன்னிலையில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
இது குறித்து தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், தற்போது காவல்துறை வழக்கை விசாரித்ததால் நீதிபதிகளால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இத்தகைய அதிகாரிகளை வைத்து எப்படி குற்ற வழக்குகளை விசாரிப்பது.குற்ற வழக்குகளை இவ்வாறு தீர்க்க முடியுமா.
இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது இந்த நாட்டு மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுக்கும்.“ என தெரிவித்தார்.
Post a Comment