Header Ads



தேர்தலுக்காக மற்றுமொரு, மோசமான நடவடிக்கை


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை கடந்த வாரம் 100 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், ஒரே நேரத்தில் இவ்வளவு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது சந்தேகத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனுமதி பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.


டொலர் பற்றாக்குறைக்கு பரிகாரமாக 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை இறக்குமதி செய்து கொள்வனவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.