Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதனை தடுக்கும் அமைச்சர்


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு  பொதுமன்னிப்பு வழங்கப்படுவதினை அமைச்சர் ஒருவர் தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளனர்.


எனினும் இந்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு முக்கிய அமைச்சர் ஒருவர் தடையை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விவகாரம் தொடர்பில் குறித்த அமைச்சர் அசமந்தப் போக்கினை பின்பற்றி வருவதாகவும், நடவடிக்கை எடுப்பதினை காலம் தாழ்த்துவதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.


இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தி கடந்த மார்ச் மாதம் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.


ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்கள், கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.