Header Ads



எமது ஆட்சியில் இலங்கை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்கப்படும்


தமது நிர்வாகத்தின் போது இலங்கை பொதுநலவாய அமைப்பிலிருந்து அகற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். 


தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்து பூர்வமாக இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


பிரிட்டிஷ் மகாராணியின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நாடுகள் அதிலிருந்து விடுபட்ட பின்னர், அந்த நாடுகளை வேறொரு வழியில் அடிபணிய வைக்கவே பொதுநலவாய அமைப்பு நிறுவப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


பிரித்தானிய மகாராணியின் ஆதிக்கம் இல்லாத பொதுநலவாய அமைப்பில் தான் தமது கட்சி அங்கம் வகிக்கிக்கும் எனவும், ஆனால் அவர் ஆதிக்கம் செலுத்தும் பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கை விலகிக்கொள்ளும் என்பதை தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.