Header Ads



முஸ்லிம்களின் வேதனையை குறைத்து மதிப்பிட வேண்டாம்


ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரினால் போதுமென அரசு நினைக்கின்றது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின்  வேதனையை இந்தளவு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கான நஷ்டஈடு அரசாங்கத்துக்கு விரைவில் கிடைக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான மரிக்கார்  தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில்  உரையாற்றுகைம் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்  


கொரோனா  தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் ஜனாஸாக்களை எந்தவித விஞ்ஞான ரீதியிலான தீர்மானமும் இல்லாமல் எரிப்பதற்கு ராஜபக்ச  அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மிகவும் வேதனை அடைந்தது.  இவ்வாறான நிலையில் அரசாங்கம் வேறுமனே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி இதில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என நினைப்பது   முட்டாள்தனம்.


ராஜபக்சவினரை  இந்த குற்றத்தில் இருந்து பாதுகாத்து அதிகாரிகள் மீது பழி சுமத்தவே அரசாங்கம் திடீரென இவ்வாறான மன்னிப்புக்கோரும் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறது. அப்படியானால் ஜனாஸாக்களை எரிப்பதற்கு அதிகாரிகள் விஞ்ஞான ரீதியில் அல்லாமல் ஆலாேசனை வழங்கி இருந்தால், அந்த தீர்மானத்தை எடுத்தவர்கள் யார்?அப்போது அமைச்சரவையில் இருந்தவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்கள்?.


ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி, தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின்  வேதனையை இந்தளவு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கான நஷ்டஈடு அரசாங்கத்துக்கு விரைவில் கிடைக்கும் என்றார். 

No comments

Powered by Blogger.