ஜனாஸாக்களை எரித்துவிட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பியோட வேண்டாம் - இழப்பீடு வழங்கு - சஜித்
இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டன. நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை தவறான தீர்மானத்தை எடுத்தது.
இந்த தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது?
இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்?
இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன?
போன்ற விடயங்கள் தொடர்பான காரணங்களை முன்வைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment