அடுத்த வேட்பாளர் கமலா..? டிரம்பின் உடனடி பதில் என்ன..??
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு, புதிய வேட்பாளராக கமலா ஹரிஸை ஆமோதித்துள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டு, எனது முதல் முடிவு கமலா ஹரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது தான் எனவும், இதுவே நான் எடுத்த சிறந்த முடிவு எனவும் அவர் தனது 'X' தளத்தில் இட்ட பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்க தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை விலகுவதாக அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப்பில் சிஎன்என் செய்திச் சேவைக்கு வழங்கிய ஒரு செவ்வியில்,
பைடனை வீழ்த்துவதை விட, கமலா ஹாரிஸை தோற்கடிப்பது எளிதாக இருக்கும்
பைடன் நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என வர்ணித்தள்ளார்.
Post a Comment