Header Ads



கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, ஞானசாரர் வெளியே வந்தார்


4 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஞானசார தேரர் சமர்ப்பித்த மறுசீரமைப்பு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி கூரகல விகாரை தொடர்பில், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என நிரூபணமானதைத் தொடர்ந்து மார்ச் (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யபட்டபெந்தி, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.


அத்தோடு ஏப்ரல் 03ஆம் திகதி ஞானசார தேரருக்கு, பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.