Header Ads



ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரியவரின் மனுவை நிராகரித்து, அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசியலமைப்பின் 19ஆவது சீர்திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாததால் பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 


சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டடிருந்தது.


அதன்படி, குறித்த மனுவைப் பரிசீலிக்க  பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.


மேலும் சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவிற்கு அபராத கட்டணமாக 05 இலட்சம் ரூபா விதிக்கப்பட்டுள்ளதுடன்,  ஜூலை 31ஆம் திகதிக்குள் இதனை  செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.