தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
கௌரவ அதிஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கேவலப்படுத்த எத்தனிக்கும் இந்த பிரதமர் என்ற போக்கிரியையும் அவருடைய அடிவருடிகளையும் மிகவிரைவில் கைது செய்து செத்துமடியும் வரை சிறையில் அடைக்க இந்த நாட்டு மக்கள் சரியான முறையில் செயல்பட வேண்டும் என இந்த நாட்டில் மக்களுக்கும் நாட்டுக்கும் முன்னேற்றத்தை விரும்பும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete