Header Ads



காயத்துடன் உயிர்தப்பினார் ட்ரம்ப் - 20 வயது துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை


பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.


பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.


இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதலால் நானும் சாராவும் அதிர்ச்சியடைந்தோம். அவர் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  


அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தோட்டா காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் உயிர் தப்பியுள்ளார்.


துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார் .


அதன்பின்னர் அவருடைய பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.   


மேலும் அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெய்ப்பாதுகாவலர்கள் அவரை அழைத்துச் செல்கின்ற போதும் ட்ரம்ப் தனது கையை உயர்த்தி தன்னுடைய தைரியத்தையும் உறுதியையும் வெளிக்காட்டியுள்ளார்.


துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.    


ட்ரம்ப் உரையாற்றிய மேடைக்கு எதிரே இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்தே ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டு, உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ.எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.


No comments

Powered by Blogger.