ஆயுதங்களுடன் ஒருவர் கைது - அதிரடிப்படை தெரிவிப்பு
(தமிழ் மிரர்)
மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் T.56 துப்பாக்கிகள் இரண்டு, அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள், ஒரு பைனாகுலர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை ஏற்றிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் கருவாடு வியாபாரத்தில் ஈடுபட்டார் என்று விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
டி.56 துப்பாக்கியின் அறுபது ரவுண்டுகள் மற்றும் இரண்டு மகசீன்கள், பைனாகுலர் ஆகியவை உரை பையில் போட்டு, தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை தோண்டி எடுத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment