தேர்தல் பற்றிய ரணிலின் பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. - PMD
தற்போது அமுலில் இருக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் சரியாக இயங்கவில்லையா? அல்லது அவை இவருக்குச் சாதகமாக செயற்படும் என்பதில் சந்தேகமா? இதில் ஏதோ ஒரு காரணத்தை வைத்துத் தான் மற்றொரு பிரதி பொலிஸ் மா அதிபரை நியமித்து தேவையற்ற பொறுப்புகளை ஒப்படைத்து இன்னும் பொதுமக்களின் கோடான கோடி பணத்தை வீணடிப்பது எந்தவகையிலும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக நிற்கின்றனர். அவர்களின் மனவிருப்பை நிச்சியம் தேர்தலில் தெரிவிப்பார்கள்.
ReplyDelete