பச்சை குத்துபவரின் வாக்குமூலத்தை ஒளிபரப்பியதால் பலாய்
அத்துருகிரியவில் 'கிளப் வசந்த' கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பச்சை குத்தும் கடை உரிமையாளரின் வாக்குமூலம் தொடர்பான காணொளி காட்சியை செவ்வாய்க்கிழமை (09) ஒளிபரப்பியமை தொடர்பில் இருதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) கேள்வி எழுப்பினர்.
இந்த விடயம் தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, .
சந்தேக நபரிடம் காவல்துறை முன்னரே விசாரித்து பின்னர் ஊடக நிகழ்ச்சி நடத்தியது தெளிவாகத் தெரிகிறது. சந்தேக நபரிடம் கேள்வி கேட்ட டி.ஐ.ஜி சில விஷயங்களை மறந்து விட்டு சில உண்மைகளை அவருக்கு நினைவூட்டுவதை நாம் தெளிவாகப் பார்த்தோம் என்றார்.
“கொலைக்கு காரணமானவர்களை விடுவிப்பதே வீடியோ கிளிப்பை ஒளிபரப்பியதன் பின்னணியில் இருக்கும் நோக்கமாக இருக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த காணொளியை பகிரங்கமாக ஒளிபரப்பினால் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment