Header Ads



உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்


நடைமுறைப்படுத்தப்படவுள்ள இ-விசா முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து அதற்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று (24) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.


இந்த இ-விசா முறைகளால், நாட்டின் முக்கிய பாதுகாப்புத் தகவல்கள் வெளி தரப்பினருக்கு தெரியவரும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதனால் இந்த நாட்டு மக்கள் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மனுதாரர்கள் தங்கள் மனுவில், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைப்பை செல்லாததாக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.   

No comments

Powered by Blogger.