Header Ads



சுயேட்சை வேட்பாளராக ரணில்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 


தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்ட அவர், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளால் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 


எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.. 

1 comment:

  1. அவ்வப்போது இவர் பேசுவதையும் கருத்து வௌியிடுவதையும் உற்று நோக்கும் போது ஒரு யதார்த்தம் தௌிவாகத் தெரிகிறது. அதாவது யூஎன்பீ உற்பட எந்த ஒரு கட்சியிலும் இவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் அவ்வப்போது பயணித்து பொதுமக்களுக்கு காணியுறுதி வழங்குதல், கொழும்பில் அரச குடியிருப்பு கட்டடங்களில் வாழும் பொதுமக்களுக்கு வீட்டு உறுதி வழங்குதல், பொருட்களின் விலைகளை அவ்வப்போது குறைத்தல், விலைவாசிகளைக் குறைப்பதில் மும்முரமாக ஈடுபடுதல், மின்சார, நீர் போன்றவற்றின் விலை குறைப்பு போன்ற தேர்தல் கால உத்திகளைப் பயன்படுத்தி அவருடைய வாக்கு வங்கியைப் பலப்படுத்தலாம் என்ற கணிப்பில் அத்தனை தேர்தல் சட்ட விரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு, பொய் மூட்டைகளை அவ்வப்போது அங்குமிங்கும் இறக்கி வரும் இவருக்கு தேசிய மட்டத்தில் ஒரு இலட்சம் வாக்குகள் கிடைக்குமா என்பது பெரும் சந்தேகமாக காணப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.