Header Ads



ஜனாஸா எரிப்புக்கு நஷ்­ட­ஈடு வழங்கப்படுமா..? அமைச்சர் வழங்கிய பதில்


கொவிட் 19 தாக்­கு­தலால் உயி­ரி­ழந்த மக்­களை தகனம் செய்­த­வர்­க­ளிடம் மன்­னிப்பை கோரு­வ­தற்கு அப்பால் அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் விடயம் குறித்த விசா­ரணை நடத்தி முஸ்லிம் மக்­க­ளுக்கு உரிய தீர்­வொன்றை வழங்­குவோம் என எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு சபை முதல்வர் சுசில் பிரே­ம­ஜ­யந்த பதி­ல­ளித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில், கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் எரிக்­கப்­பட்­டமை குறித்து அமைச்­ச­ரவை தீர்­மானம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இது குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் தெளி­வு­ப­டுத்­து­மாறு கூறி­யி­ருந்­தனர்.


அத்­துடன், அன்று அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் இதற்கு கை உயர்த்­தி­ய­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். உண்­மையில் அன்று நான் அமைச்­ச­ர­வையில் இருக்­க­வில்லை.


கோட்­டாவின் அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் தற்­போது ஆளும் கட்­சி­யிலும் இருக்­கின்­றனர், எதிர்க்­கட்­சி­யிலும் இருக்­கின்­றனர்.


எனவே, உங்கள் தரப்பில் உள்­ள­வர்­க­ளிடம் ஏன் அன்று இதற்கு கை உயர்த்­தி­னீ­ர்கள் என்று கேளுங்கள், எங்­க­ளு­டைய தரப்­பி­லுள்­ள­வர்­க­ளி­டமும் நான் கேட்­கிறேன்.


அப்­போது உலக சுகா­தார ஸ்தாப­னத்தில் வழி­காட்­டல்­களே பின்­பற்­றி­யி­ருக்க வேண்டும் என்­ப­துதான் எனது தனிப்­பட்ட நிலைப்­பா­டா­கவும் இருந்­தது.


ஏன் இதனை செய்­தனர், மன்­னிப்பு கோர­லுக்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன தீர்வு வழங்­கு­வது என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ருவேன். அத்துடன், சுகாதார அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய அமைச்சுகளிடமும் இதனை முன்வைத்து அறிக்கையொன்றை தருகிறேன் என்றார்.

Vidivelli

No comments

Powered by Blogger.