ஞானசாரர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சிலர் அரசியல்வாதிகளின் பின்னால் ஒளிந்துகொண்டார்கள் என கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன்இ திக்வெல்ல பகுதியில் 2014ஆம் ஆண்டு அரேபிய வர்த்தகர் ஒருவரை நாம் சந்தித்த போதுஇ இலங்கை மீது ஆபத்தான தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ஒரு பயங்கரவாதக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக அவர் கூறியிருந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ குறித்த அரேபிய வர்த்தகரின் வலியுறுத்தலுக்கமைய பாதுகாப்புச் செயலாளரிடம் இந்த விடயத்தை நாம் தெரியப்படுத்தியும் கூட தாக்குதல் நடாத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தான் ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதாக அனுர ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் போன்ற அரசியல்வாதிகளின் பின்னால் தான் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஒளிந்து கொண்டார்கள் என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment