சஜித் மீது, இஸ்ரேல் குறி. நல்ல பாடம் புகட்டவும் திட்டம் - பொன்சேக்காவுக்கு கௌரவம்
பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும், பொது நிகழ்வுகளிலும் என, பலஸ்தீன சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாசா, கொழும்பில் நடைபெற்ற காசா சார்பு போராட்டங்களிலும் பங்கெடுத்திருந்தார்.
பலஸ்தீனம் சார்பான, தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனவும், அவர் கடந்த வாரம் பொது நிகழ்வொன்றில் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவரை இஸ்ரேல் குறிவைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாசாவுக்கு நல்ல பாடம் புகட்டப்படுமென, இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறித்த தகவல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சரத் பொன்சேக்கா விலக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் விசேட அழைப்பு விடுத்து, இந்நதியாவுக்கு அழைத்திருந்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை, கடந்த வாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலினால் சரத் பொன்சேக்கா கௌரவிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித்திற்கு எதிரான நிலைப்பாட்டை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நிலையில், பொன்சேக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டின.
Post a Comment