Header Ads



பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் தனி வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்த மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எம்பிக்கள் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட குழுவில் இருபதுக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளடங்குகின்றனர்.


இதுவரை அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், தனி வேட்பாளரை முன்னிறுத்தி ஆதரித்ததன் ஊடாக எதிர்க்கட்சி குழுவாக இயல்பாகவே மாறிவிடுவார்கள்.


இந்த குழுவினர், பாராளுமன்றத்தில் அமர்வது தொடர்பில், எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டங்களில் கேள்வி எழுப்ப எஞ்சிய எம்.பி.க்கள் தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.


இதேவேளை, தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கட்சியின் தீர்மானத்தால் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.


அரசாங்கத்திற்கு எதிரான கருத்துடன் இருந்து அந்தப் பதவிகளை வகிப்பதும் சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.