காலைச் சாப்பாட்டில் ஏற்பட்ட திருப்பம் - ரணிலுக்கு ஆதவளிக்க பொதுஜன பெரமுன முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவ நல்க, பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கும் அமைச்சர் ஒருவர், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில், அவரது சகா சாகல ரத்நாயக்கா மற்றும் மகிந்த ராஜபக்ஸ், பசில் ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்ற, ஒரு காலைச் சாப்பாட்டின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், பொதுஜன பெரமுன சார்பில், தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவை களமிறக்குவது என, பசில் ராஜபக்ஸ தீர்மானித்திருந்தார். அதற்கும் நாமல் ராஜபக்ஸவும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த தகவலை ஜப்னா முஸ்லிம் இணையமும் பிரத்தியேக செய்தியாக வெளியிட்டிருந்தது.
எனினும் பொதுஜன பெரமுன தனித்து களமிறங்குவது, முற்றுமுழுதாக ரணிலின் படுதோல்விக்கு வழிவகுக்கும் என்பதாலும், ராஜபக்ஸ் குடும்பத்திற்கு எதிரான வழக்குகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்ற தீர்மானத்தை, ராஜபக்ஸ சகோதரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி அறிவிக்கவே குறித்த காலைச் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ரணில், சாகல, மகிந்த, பசில் பங்கேற்று முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடி, தமக்கிடையேயான முரண்பாடுகளுக்கும் தீர்வு கண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அந்த நம்பிக்கையான வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.
Post a Comment