தண்டிக்கப்படாத கொலைகளைச் செய்யாதீர்கள்
நாம் கேட்கும் ஒவ்வொரு புண்படுத்தும் வார்த்தைக்குப் பிறகும் ஆயிரம் வருடங்கள் முதுமை அடைந்து விடுகிறோம்...!
தப்புக்கணக்கு,,,
வார்த்தைகள் வெறுமனே வாயிலிருந்து, வெளிவந்து காதுகளைச் சென்றடையும் வீணான சொற்கள் என்று நினைப்பவன் தப்புக்கணக்கு போட்டுவிடுகிறான்.
புண்படுத்தும் தீச்சொற்களானது உயிர் கொல்லும் தோட்டாக்களாகும், ஆனால் ஒன்று, சட்டம் தண்டிக்காத கொலைக் குற்றங்களாகும்.
நற்சொற்கள் யாவும் உள்ளம் எனும் வளமான நிலத்தை வாழ வைக்கும் மழைத் துளிகளாகும், பாசத்தையும் நேசத்தையும் அள்ளி வழங்கும் பயிர்களாகும்.
மனிதன் என்பவன் காலியான ஒரு கூடு.
அன்பான ஒரு வார்த்தை அவனை வானளாவ உயர்த்திவிடும்.
புண்படுத்தும் ஒரு வார்த்தை, அவனை தரையில் வீழ்த்தி, உயிரோடு சாகடித்து விடும்.
தெரிந்துகொள்ளுங்கள்!
நல்ல வார்த்தைகள் யாவும் புண்ணியம் சேர்க்கும் தருமங்களாகும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment