அமைச்சருக்கே இந்த நிலைமையா..?
சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம், குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சருக்கு சொந்தமான கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியான முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து இலட்சம் ரூபா கடன் உச்ச வரம்பினைக் கொண்ட இலங்கை வங்கிக் கடன் அட்டை ஒன்றைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடியான முறையில் கடன் அட்டையை பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Post a Comment