அதிகார பிழைப்புக்காக பணத்தை நாசமாக்கும் அரசாங்கம்
சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் வகையில் எந்தவொரு திருத்தத்தையும் இந்த வேளையில் கொண்டு வர வேண்டாம் என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பத்து பில்லியன் ரூபாவை செலவிட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் அது நிதிக் குற்றமாகும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பணமில்லை எனக் கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் திருத்தங்களை அரசாங்கம் முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலைத் தவிர்த்துள்ள அரசாங்கம், தனது சொந்த அதிகாரத்தின் பிழைப்புக்காக எவ்வாறு செயற்படுகின்றது என்பதை இது காட்டுவதாகவும் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
Post a Comment