யார் இந்த தென்னக்கோன்..?
இவ்வாறான நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மதிப்பளித்து பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தால் பொலிஸ் மா அதிபர் பதவியை இரத்துச் செய்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டுக்குச் செல்ல வேண்டும், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருக்கக்கூடத் தகுதியற்றவர் என்றார்.
ஹட்டனில் உள்ள தனியார் விழா மண்டபத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே சமீர பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகபட்சமாக இருந்தால் இன்னும் ஐம்பது நாட்கள் இருக்க முடியும், விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம் இன்னும் ஐம்பது நாட்களுக்கு இருக்கும்.
இந்த நபரின் பெயரை, பொலிஸ் மா அதிபரின் பதவிக்கு முன்மொழிந்தபோது, அவருக்கு மிகவும் விரும்பத்தகாத கடமை வரலாறு உள்ளது, போதைப்பொருள் பிடிப்பதாகக் கூறி போதைப்பொருள் கடத்தும் ஒருவரை எப்போதாவது அவர் பிடித்திருக்கின்றாரா? போதைக்கு அடிமையானவர்களே கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் இவர், ஹோட்டலை தரைமட்டமாக்கினார். அப்போது சொன்னார். இது (ஹோட்டல்) போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தில் கட்டப்பட்டது என்று. தனக்கு கப்பம் கொடுக்காதவர்களை போதைப்பொருள் காரர்கள் எனக் கூறி, அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்த ஆயுதங்களை கொண்டுவரும்போது, பொலிஸானால் கைப்பற்றப்பட்ட லொறியை இவரே விடுவித்தார். அவ்வாறான நபரை பொலிஸ் மா அதிபர் ஆக்கினால், நாட்டின் பாதுகாப்புக்கு என்னவாகும் என்றும் வினவினார்.
இந்த பொலிஸ் மா அதிபர் ராஜபக்சக்களுக்கு மிகவும் பிடித்தமானவர், உயர் நீதிமன்றம் அவரது பொலிஸ் மா அதிபர் பதவியை நீக்குமாறு நேரடியாகச் சொல்கிறது.
அவரை நீக்க சட்டவாக்கம் அனுமதிக்காது என்று பிரதமர் கூறுகிறார், இது பாராளுமன்றமா? இல்லை, இது பாராளுமன்றம் அல்ல என்றார்.
ரஞ்சித் ராஜபக்ஷ
Post a Comment