Header Ads



சஜித்தின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை


கொழும்பு 07 இல்  அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம். 


ட்ரம் மீதான தாக்குதலை நாம் வண்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது.  


இலங்கையிலும் தேர்தல் நெருங்கி வருவதால் எமது எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.


ஆளுநர்கள் ஊடாக பல நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாரை நியமித்துள்ளனர். உள்ளூராட்சி மன்ற சட்டம் இருக்கிறது. அரசாங்கம் பொய்யை உருவாக்கி தேர்தலை பிற்போட்டுள்ளனர். ஆனால் உள்ளூராட்சி மன்ற சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. ஆளுநர்கள் சில சட்டவிரோதமாக பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளையும் நியமணங்களையும் மேற்கொண்டு வருவதை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். 


தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கே தேர்தல் ஆணைக்குழு இருக்கிறது. 


தேர்தல் இருக்கும் போது பிரதேச சபை, மாநகர சபை வளாகங்களுக்கு முன்னைய உறுப்பினர்களை அனுமதிக்காதிருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இவர்கள் தலையீடுகளை ஏற்படுத்த முடியாது. இவர்கள் முன்னாள் உறுப்பினர்களாகும். எனவே அரசியல் நோக்கங்களுக்காக உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களை ஆளுநர்கள் ஈடுபடுத்த வேண்டாம். இந்த சட்ட விரோத நடைமுறைகளை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.  


ஐக்கிய மக்கள் சக்தியால் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என கூறியுள்ளோம். ஆனால் இதற்கு இந்நாட்டிலுள்ள சட்டங்கள் உரியவாறு நடைமுறைப்படுத்த முடியும். 


மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை வெளிப்படையில் மறுக்கலாம். ஆகவே தான் இதன் புதிய நடைமுறையாக கம்பனிகளுக்கு இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கம்பனிகளின் பங்குதாரர்கள் யார் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 


கடந்த வாரம் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வீசா நடைமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் 140 நாடுகளில் தொழிற்பட்டு வரும் நிறுவனமான VFS எனும் நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டு வேறு கம்பனிகள் மூலம் இதை முன்கொண்டு செல்கின்றனர். 


இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாது போகிறது. 


வீசா நடைமுறைகள் குறித்து கேட்டறிய நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது முதல் தடவையில் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.  இது ஓரு வகையில் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாக பார்க்க வேண்டும். 


அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும். 


அரச அனுமதி இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல், கேள்வி மனு இல்லாமல் இந்த கம்பனிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.  


இந்த வீசா நடைமுறைகளை 2012 முதல் மொபிடல் நிறுவனமே முன்னெடுத்துச் சென்றது. அவர்கள் மீள கோரிக்கை விடுத்தும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. காலத்துக்கு காலம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மொபிடல் நிறுவனத்தின் கோரிக்கையை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது புதிய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். 


சகல நாடுகளுக்கும் ஒரே விதமான நடைமுறை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சீனாவிற்கு வேறு நடைமுறை இங்கு பின்பற்றப்படுகிறது.


தரவுகளை திருடும் நடவடிக்கை இங்கு காணப்படுகின்றன. இது ஆபத்தான விடயம். 


தேர்தல் நெருங்கும் போது பில்லியன் அண்ணளவாக 10 பில்லியன் ரூபாக்களை திருட்டுத் தனமாக பெற்றுக் கொள்வதே இந்த புதிய நடைமுறைக்கு காரணமாகும். இவ்வாறு திருட்டுத்தனமாக கையகப்படுத்தும் பணத்தை எதிரவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்வர்.  


புதிய வீசா நடைமுறை மூலம் நாட்டுக்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்? என்ன முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது ? பொய்யான கருத்தைக்களையே கூறி தமது சொந்த நலவுகளையே செய்து வருகின்றனர். 


விஞ்ஞான ரீதியான, தர்க்க ரீதியான தரவுகளை மையமாகக் கொண்ட பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.


புதிய வீசா நடைமுறைக்கு குறித்த அமைச்சரும் ஜனாதிபதி செயலகமுமே பொறுப்புக் கூற வேண்டும்.

No comments

Powered by Blogger.