Header Ads



ஒரு நாள் கிரிக்கட் போட்டியில், சாதனை மேல் சாதனை


ஸ்கொட்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியில் அறிமுகமான சார்லி கேசல்( Charlie Cassell ) அறிமுகப் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.


ஓமானுக்கு எதிரான ஐசிசி உலகக் கிண்ண லீக் தொடரில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளரான சார்லி கேசல் முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி சாதனைபடைத்துள்ளார்.


ஸ்கொட்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் சோல் மாற்றீடாக அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட சார்லி, தாம் வீசிய முதல் பந்திலேயே ஓமான் அணியின் தலைவர் சீசான் மக்சூத்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.


அதற்கு அடுத்த பந்திலேயே ஆயான் கானின் விக்கெட்டை சார்லி கேசல் வீழ்த்தியிருந்தார் .


இதன்படி, ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான ஒரு வீரர், தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெடடுகளை வீழ்த்திய சாதனையை சார்லி கேசல் படைத்துள்ளார்.


அத்துடன் தொடர்ந்து பந்து வீசிய அவர், 5.4 ஓவர்களில் 21 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.


இதன் மூலம் ஒரு அறிமுக பந்துவீச்சாளர் ஒரு நாள் போட்டிகளில் மேற்கொண்ட சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையையும் சார்லி கேசல் படைத்துள்ளார்


 9 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வேகப்பந்து பேச்சாளர் காகிசோ ரபாடா பங்களாதேஸ் அணிக்கு எதிராக 8 ஓவர்களில் 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.


அந்த சாதனையை முறியடித்துள்ள சார்லி கேசல் தற்போது 21 ஓட்டங்களை விட்டு கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


இதேவேளை இந்த போட்டியில் ஓமான் அணி 21.4 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.


இதனையடுத்து துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 17.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.   

No comments

Powered by Blogger.