Header Ads



இலக்கை அடையும், பயணத்தில் சவ்மி ஷஹீட் - நாமும் ஆதரவு நல்குவோம்


பேருவளை சவ்மி ஷஹீட்,  சாதிக்கத் துடிக்கும் ஒரு சாதனை வீரன், சாதனைகள் பல புரிந்து வருகிறார்.


அவரது சாதனையின் கட்டமாக நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி வரும் லட்சியத்துடன் பயணத்தை பேருவளையில் இருந்து  ஆரம்பித்து, தென்பகுதியூடாக பயணத்தின் 11 வது நாளான  இன்று -24- காலை, மொனராகலையில்  இருந்து சிம்பலாண்டுவ வை நோக்கி  தனது பயணத்தை ஆரம்பித்தார். 


இவரது நடைபாதையில்  நாட்டைச் சுற்றும்  பயணம் 50 நாட்கள் என திட்டமிடப்பட்ட நிலையில், தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். 


இலங்கை வரலாற்றில் நடை பயணத்தில் நாட்டைச் சுற்றும் இரண்டாவது நபராகவும், குறைந்த வயதில் நாட்டைச் சுற்றும்  முதலாவதாகவும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


கடந்த 22. 04. 2004 ஆம்ஆண்டு "இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம்' எனும் தொனிப்பொருளில் 24 ஆவது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற  உத்தியோகத்தர்  ஷெல்டன் பெரேரா 53 நாட்களில் இலங்கையை நடைபயணமாக சுற்றிவந்தார்.


அந்த வகையில் நாட்டைச் சுற்றி வரும்  இளம் வயதை உடைய முதலாம் வீரன் என்ற வகையில் முதலாம் இடத்தை தட்டிக் கொள்ளும் இரவரது முயற்சி வெற்றியடைய வேண்டும்.


ஒவ்வொரு இடங்களிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார், இவருக்குத் தேவையான பாதுகாப்பினையும், இவரது உடல் ஆரோக்கியத்தையும் அவரிடம் சென்று கேட்டறிந்து, இவரது பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இடையிடையே இரகசிய போலீஸாரும் இவரிடம் சென்று நிலமைகளை  கேட்டறிந்து  முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.


இந்தப் பயணத்தில் இவரது நோக்கம். நம் நாட்டின் ஒற்றுமை கட்டிக் காக்கப்பட வேண்டிய வேலையில், பல்லின மக்கள் வாழும் நாட்டில், ஒரு முஸ்லிமாக பிறந்து  நாடு பூறாகவும் சென்று, சகல இன மக்களையும் சந்தித்து  ஆனந்தமடைந்து, இன மத மொழிபேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்கு ஒரு பெருமையைத் தேடிக் கொடுத்து, நடை பயணத்தின் மூலமாக உடல் ஆரோக்கியத்தை மக்களுக்கு ஒரு படிப்பினையாக எடுத்துக்காட்டி,  ஒரு சாதனையை நிலை நிறுத்துவதாகும்.


இவரது இலக்கை அடையும் இலட்சிய பயணத்தின் ஒரு சிறப்பான விடயம், நேரத்திற்கு நேரம், வேலைக்கு வேலை, நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்றியவராக தனது பயணத்தை தொடர்கின்றார்.


தென்பகுதியூடான இவர் இவரது பயணத்தில் குறிப்பாக பெரும்பான்மை இன மக்களும், வெளிநாட்டில் இருந்து வந்த உல்லாச பயணிகளும் இவருக்கு அன்பையும் ஆதரவை தெரிவித்து உற்சாகப்படுத்தி இருந்தனர்.


இவரது பயணத்தில் காணக்கூடிய ஒரு விசேட அம்சம் தன் இலட்சியத்தில் சற்றும் சலிக்காமல் தன்னந்தனியாக செல்லும்போது இனிமையான பாட்டுக்களை பாடியவராக தொடர்ந்தும் ஆனந்தத்துடன் காணப்படுகின்றார்.


தற்போது கிழக்கு மாகாணத்தை நோக்கி இவரது பயணத்தில், முஸ்லிம் மக்களும், உடன் பிறவா,  மொழி உறவுகளான தமிழ் மக்களும் இவரை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி ஒரு சாதனை வீரனின் சாதனையை நிலைநிறுத்த,  அந்தந்த  இடங்களில் அவரை வரவேற்று ஊக்கமளித்து வழியனுப்ப  வேண்டும்


(ஹில்மி )

No comments

Powered by Blogger.