கிளப் வசந்தவுக்கு நாடு முழுவதும் கடன், கையில் பணம் இல்லாதவராகவே இருந்தார்
மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினர் சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டிரான் அலஸ் “இந்த தவறை மீண்டும் செய்யவேண்டாம் என கடுமையாக தான் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு தான் பணிக்கவில்லை என்றார்.
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ‘கிளப் வசந்த’ சுட்டுக்கொல்லப்பட்டபோது, நாடுமுழுவதும் கடன் பட்டிருந்தார். கையில் பணம் இல்லாதவராகவே இருந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதான காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டாலும், அவரது தொழில்கள் வங்குரோத்து நிலையில் உள்ளன, அவர் நாட்டுக்கு கடனாளி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment