முள்ளம்பன்றிகளை கண்டால்...
- Imran Farook -
முள்ளம்பன்றிகளை உங்கள் வீட்டுத் தோட்டங்களில் அல்லது பண்ணைகளில் கண்டால், அதன் பாட்டில் விட்டுவிடுங்கள்.
மனிதனுக்கும் நமது சுற்றுச் சூழலுக்கும் உற்ற நண்பனாகக் கருதப்பட்டும் முள்ளம்பன்றி மிகவும் கூச்ச சுபாவமுள்ள, இரவில் இயங்கும் ஒரு விளங்காகும்.
முள்ளம்பன்றிகள் பெற்றிருக்கும் விஷேச விஷ எதிர்ப்பு சக்தி காரணமாக அவைகள் பண்ணைகள் மற்றும் வயல் வெளிகளில் காணப்படும் விஷப் பூச்சிகள், தேள் மற்றும் பாம்புகளைக் குறைப்பதில் கணிசமான பங்கு வகிப்பதோடு இலவச இராக் கால காவலாளியாகவும் கருதப்படுகிறது.
முள்ளம்பன்றி பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான ஒரு செய்தியும் சொல்லப்படுகிறது. அதாவது பெண் முள்ளம்பன்றியானது மிகவும் ரோசமுள்ள ஒரு விலங்காம். தனக்கான ஆண் முள்ளம்பன்றி இன்னொரு பெண் முள்ளம்பன்றியுடன் குடும்பம் நடத்துவது அதற்கு தெரியவந்தால் புதிய தம்பதிகளை வரவேற்று ஒரு புதிய வீட்டைக் கட்டி (குழியை) பரிசாக வழங்குமாம். புதிய தம்பதிகள் உள்ளே சென்றவுடன் அப்படியே மண்ணைப் போட்டு மூடிவிடுமாம்.
Post a Comment