Header Ads



அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு - கருத்துக்கணிப்பில் கண்டறிவு


நாட்டின் போக்கை பற்றி நம்பிக்கையுடன் சிந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜூன் இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது  என வெரிட்டேரிசர்ச்சின் 2024 ஜூலைக்குரிய 'தேசத்தின்மனநிலை' கருத்துக்கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன.

வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய 'தேசத்தின்மனநிலை' கருத்துக்கணிப்பின்படி,நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடஅரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப்போக்குபற்றி மக்கள்நம்பிக்கையாக உணர்கிறார்கள். 


2024பெப்ரவரியில் 7% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தின் மதிப்பீடு, ஜூலை மாதத்தில் 24% ஆக அதாவது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து பதிலளித்தவர்களில்,28%மக்கள்அது நல்லதுஅல்லது சிறந்தது என்று தெரிவித்துள்ளனர், இது 2024 பெப்ரவரியில் காணப்பட்ட 9%இல் இருந்து மூன்று மடங்கு அதிகரிப்பைக் குறித்துநிற்கிறது.நாட்டின் பொருளாதார நிலைமைகள் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று நம்பும் மக்களின் பங்கும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பதிலளித்தவர்களில் 30% பேர்இந்தக்கருத்தைக்கொண்டிருந்ததோடு, இது 2024 பெப்ரவரியில் 9 % ஆகஇருந்ததுகுறிப்பிடத்தக்கது.


1.    அரசாங்கம் மீதான மக்களின்அங்கீகாரம் | 24% |


"தற்போதையஅரசாங்கம்செயற்படும்முறையைநீங்கள்அங்கீகரிக்கிறீர்களாஅல்லதுமறுக்கிறீர்களா?" என்றகேள்விக்கு, பதிலளித்தவர்களில்24% பேர் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளனர்(பிழைவரம்பு± 2.73%).2023 ஜூன் இல் 21% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தைவிட இது அதிகமாகவேகாணப்படுகின்றது.


2.    பொருளாதார நிலைமைகள் பற்றியமதிப்பீடு | நல்லது அல்லது சிறந்தது: 28% |


"நாட்டின்தற்போதையபொருளாதாரநிலைமைகளைசிறப்பு, நன்றுஅல்லதுமோசம்" எனமதிப்பிடுமாறுகேட்டபோது,28% மக்கள் அது நல்லது அல்லது சிறந்தது என்று கூறியுள்ளனர் (பிழைவரம்பு± 2.87%).இது 2023 ஜூன் மாதத்திலும் 27% ஆக, அதாவது கிட்டத்தட்ட சமமான மதிப்பீட்டையேகொண்டிருந்தது.


3.    பொருளாதாரக் கண்ணோட்டம் | மேம்பட்டு வருகின்றது: 30% |


"ஒட்டு மொத்தமாக நாட்டின் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றதா அல்லது மோசமடைந்து செல்கின்றதா?" என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில், 30% பேர் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக நம்புகின்றனர் (பிழைவரம்பு± 2.91%). இது  2023 ஜூன் மாதத்திலும்  29%ஆக, கிட்டத்தட்ட சமமான மதிப்பீட்டையே கொண்டிருந்தது.


கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்


வழக்கமாக நடத்தப்படும் இக்கருத்துக்கணிப்பு வெரிட்டே  ரிசர்ச்சின் Syndicated Surveys செயற்கருவியின் ஒரு பகுதியாகும். வாக்களிப்புப்பங்காளராக வென்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடட் (Vanguard Survey (Pvt) Ltd) செயற்படுகிறது. இச் செயற் கருவி இலங்கையர்களின் உணர்வுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.


நாடளாவிய ரீதியில் தனித்தனி குடும்பங்களில் இருந்து வயது வந்த இலங்கையர்கள் 1,038 பேரைக் கொண்ட பல் கட்ட சமவாய்ப்பு பதில் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு, 2024 ஜூன் 28 முதல் ஜூலை ​06ம் திகதி வரை இந்தக்கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. இக் கருத்துக்கணிப்பு 95% நம்பிக்கை இடைவெளியில் ±3.04% அதிகபட்ச மாதிர பிழைவரம்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்படுத்தும் செயன்முறையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இப்பிழை வரம்புகள் மேலும் பாதிக்கப்படலாம்.

1 comment:

  1. பசாங் டொகாங், பசாங் டொகாங்...

    ReplyDelete

Powered by Blogger.