Header Ads



அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து - இலங்கையரினால் பிரமித்துப் போன நடுவர்கள்


அவுஸ்திரேலியாவில் நடைபெறும் MasterChef Australia போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இறுதியாக நடந்த போட்டி சுற்றின் போது அவர், வாழை இலையில் உணவு வழங்கியிருந்தார். மேலும் அது பரிமாறப்பட்ட விதம் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.


MasterChef Australia போட்டியில் இலங்கையின் சில கறிகளுடன் வாழை இலையில் சுற்றப்பட்டு உணவு பரிமாறப்பட்ட விதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.


முன்னதாக சவிந்திரி பெரேரா போட்டியின் ஒரு சுற்றில் விலக வேண்டியிருந்த போதிலும், ஏற்பாட்டுக் குழு மற்றும் நடுவர்கள் அவரை மீண்டும் போட்டியில் இணைத்துக் கொண்டனர்.


அவர் தயாரித்த  இலங்கை உணவுகளை நடுவர்கள் விரும்பி உட்கொண்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சவித்திரி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்துவிட்டதாக நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


MasterChef Australia நடுவர்கள் சவிந்திரியின் முன்னைய போட்டிகளில் தயாரித்த சுவையான  இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்புவதற்கு அவர் தெரிவு செய்திருந்தனர்.


சவிந்திரி தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு வந்ததாகவும், அதுவரை அவர் வாழ்ந்த  இலங்கையில் கிராமப்புற சமையல் குறித்து அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார்.


சவிந்திரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef Australia போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.