Header Ads



சில நல்றங்களும், சுவைமிக்க விளக்கங்களும்


தொழுகை என்பது:-

மழை நீர் போன்றது, செழிப்பான வாழ்க்கை அதனால்தான் துளிர்விடுகிறது. 

பெற்றோர் நலன் பேணுவதென்பது: அவர்கள் இருவரும் தான் பூமியில் கால்களால் நடக்கும் சொர்க்கத்தின் இரு பூங்காக்கள். 

ஹஜ் புனிதப் பயணம் என்பது:-

மறு உலக ஒன்றுகூடலுக்கு பயிற்றுவிக்கும் மாபெரும் இவ்வுலக வருடாந்திர ஒன்றுகூடல். 

நோன்பென்பது:-

சுவனத்தில் பலகாலம் உண்டு மகிழ உலகத்தில் சில மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாகும். 

இதய சுத்தம் என்பது:-

நல்லறங்கள் சேமிக்கப்படும் களஞ்சியத்தின் மந்திரச் சாவியாகும். 

நில்லாமல் ஓடும் தருமம் என்பது:-

சுவன வாசல் வரை உன்னை அழைத்துக் கொண்டு ஓடும் நதியாகும்.

உறவினர் நலன் பேணுவதென்பது:- வாழ்வாதாரம் அதிகரிப்பதற்கான வித்தியாசமான ஒரு முதலீடாகும். 

ஈமானிய தோழன் என்பவன்:-

உங்கள் ஆன்மாவின் மற்ற சரி பாதியாகும். 

ஸகாத் ஏழை வரி என்பது:-

உங்கள் பணத்தை சுத்திகரித்து, பெறுக்குவதற்கான நுட்பமான ஒரு அறுவை சிகிச்சையாகும். 

புறம் தூற்றல் என்பது:-

வருடக்கணக்கான நற்செயல்களை ஒரு நிமிடத்தில் சேர்த்து எரிக்கும் நெருப்புக் கிடங்காகும்

திருமணம் என்பது:-

உலகில் நடக்கும் பொறுப்பு மிக்க இருதர‌ப்பு ஒப்பந்தமாகும். அதன் கடமைகள் நிறைவேற்றப்பட்டால் கூலிகள் உண்டு, நிறைவேற்றத் தவறினால் தண்டனைகள் உண்டு. 

வட்டி என்பது:-

விண்ணில் இருக்கும் அல்லாஹ்வுக்கு எதிராக மண்ணிலிருந்து போகும் போர் முழக்கமாகும்.

உபரி வணக்கங்கள் என்பன:-

அழியாத சேமிப்புகான ஒரு பகுதி நேர தொழிலாகும். 

ஒரு நிமிடம் என்பது:- 

அதிலே 60 திக்ர் (இறை துதிபாடல்) செய்யப்பட்டால் சுவனத்தில் 60 மரங்களை நாட்டிவிடலாம். 

இறை இல்லங்கள் என்பன :-

விண்ணில் உள்ள அல்லாஹ்வை சந்திக்க மண்ணில் உள்ள வரவேற்பு  மண்டபங்களாகும். 

கல்வி கற்கும் அமர்வுகள் என்பவை :-

நாம் உல்லாசமாக சுற்றித் திரிய 

வானத்திலிருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட, சில மீட்டர் பரப்பளவுள்ள சுவனத்துப் பூங்காக்களாகும். 

ஒருவனே தெய்வம் (லா இலாஹ இல்லால்லாஹ்) என்ற வாசகமானது: 

இம்மை வாழ்க்கைக்கான ஆக்ஸிஜனாகும். மறுமை வாழ்வில் சொர்க்கத்திற்கான திறவுகோலாகும். 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.