அரேபியர்கள் ஏன், பின்னடைவை சந்திக்கிறார்கள்..?
ஜப்பானியர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையில் ஒரு சுவாரசியமான படகுப் போட்டி நடைபெற்றது.
ஜபானியர்களில் ஏழு பேர் கொண்ட அணியும் அரேபியர்களின் ஏழு பேர் கொண்ட அணியும் போட்டிக்குத் தயாரகினர்.
மூன்று சுற்றுப் போட்டிகளைக் கொண்ட படகுப் போட்டியில் முதல் சுற்றுப் போட்டியில் ஜப்பானிய அணி அமோக வெற்றி பெற்றது.
இரண்டாவது சுற்றில் அரேபிய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் அரேபியர்கள் தோல்வியைத் தழுவினார்கள்.
மூன்றாவது சுற்றின் போதும் அரேபிய அணியில் அடிப்படை கட்டமைப்பில் மற்றங்களுடன் தீவிர முயற்சியில் களம் இறங்கிய போதும் படு தோல்வியை தழுவ நேர்ந்தது.
அரேபிய அணியின் மோசமான தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த போட்டி ஆய்வாளர்கள் அதற்கான் விடைகளை எளிதில் கண்டுபிடித்தனர்.
ஜப்பானிய அணியில் ஒருவர் தலைவராக இருக்க மற்ற ஆறு பேரும் படகு ஒட்டுனர்களாகவே காணப்பட்டனர்.
ஆனால் அரேபிய அணியிலோ ஒருவர் தலைவராகவும் மற்றொருவர் உப தலைவராகவும் இன்னொருவர் இயக்குனராகவும் மற்றொருவர் உப இயக்குனராகவும் இன்னொருவர் மேற்பார்வையாளராகவும் மற்றவர் உப மேற்பார்வையாளர், என பதவிகள் பிரித்துக் கொடுக்கப்பட, ஒருவர் மாத்திரமே படகு ஓட்டுனராக செயல்பட்டள்ளார்.
மேலும் இரண்டாம் மூன்றாம் சுற்றுக்களில் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டதே தவிர வெற்றிக்கான வழிகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment