Header Ads



ஈரான் குழுக்களால் அச்சுறுத்தல் - பிரான்ஸை எச்சரித்துள்ள இஸ்ரேல்


ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது


பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் ஈரான் ஆதரவுக் குழுக்களால் அச்சுறுத்தப்படலாம் என இஸ்ரேல் அரசாங்கம் பிரான்ஸை எச்சரித்துள்ளது.


"ஒலிம்பிக்களின் போது இஸ்ரேலிய தூதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்ட ஈரானிய பயங்கரவாத துணை நிறுவனங்கள் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து எங்களிடம் மதிப்பீடுகள் உள்ளன" என்று இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


வழக்கமான பொலிஸாரைத் தவிர, கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் சுமார் 18,000 பிரெஞ்சு துருப்புக்களை அனுப்பியுள்ளது.

1 comment:

  1. Isreal can do such a terror work and after that they will blame iran,We must very carefull.Mossad is a nomber one criminal worker.

    ReplyDelete

Powered by Blogger.