Header Ads

ஞானசாரர் தொடர்பில், முஸ்லிம்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஞானசார தேரர் செய்த தவறுக்காக நீதிமன்றில் மன்னிப்பு கோரி, பின்னர் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்து அவருக்கு சுதந்திரம் வழங்க தலையிடுமாறு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து குறித்து றிசாத் பதியுதீன், அசாத் சாலி, முஜிபர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தண்டனை கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது இறந்த உடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

அதனை எதிர்த்து முஸ்லிம் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே பிக்கு ஞானசார தேரரே என்றும், அவர் முஸ்லிம் மக்களின் அடக்க உரிமைக்காகவும் உண்மைகளை முன்வைத்து நின்றார் எனவும் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னர் ஞானசார தேரர் அவ்வாறான தவறை செய்யவில்லை எனவும், 5-6 வருடங்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானசார தேரர் தன்னை திருத்திக் கொண்டு சமூகத்திற்கு பெரும் சேவையை ஆற்ற முடியும். அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. இஸ்லாம் தோன்றியதுமுதல் இன்றுவரை ஞானசார தேரர் செய்த இழிவான சொற்போலிவுகளே மிகவும் வெறுக்கத்தக்கது.
    மேலும் ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திக்காகவே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது எனவே செய்யாத குற்றங்களை ஞ்சயப்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் முயட்சிக்கிறார்.

    ஒருவருக்கு எத்தனைதடவை பொதுமன்னிப்பு வழங்குவது ஞானசார தேரர் தன்னை திருத்திக் கொண்டு சமூகத்திற்கு வரவே சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஓஷல ஹேரத் அறியாதவரா? ஞானசார தேரர் செய்யாத குற்றங்கள்போல் இன்னும் 100 ஞானசார தேரர்கள் வெளியே எங்களை சமூகத்துக்கு எதிராக கட்சிதமாகக்கையாண்டார்கள் அவர்களுக்கும் தண்டனை வேண்டும்.

    ஓஷல ஹேரத் கூறுவதுபோல் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கினால் பின்வரும் காலங்களில் ஞானசார தேரர் செய்த குற்றத்தைவிட பெரிய குற்றமா மற்றவர்கள் செய்தார்கள் என ஓஷல ஹேரத் ஒரு கட்டுரை வரைந்து அவர்களுக்கும் மன்னிப்புக்கேட்பார் என்பதில் என்ன நிச்சயம்.

    ReplyDelete
  2. இஸ்லாம் தோன்றியதுமுதல் இன்றுவரை ஞானசார தேரர் செய்த இழிவான சொற்போலிவுகளே மிகவும் வெறுக்கத்தக்கது.
    மேலும் ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திக்காகவே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது எனவே செய்யாத குற்றங்களை ஞ்சயப்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் முயட்சிக்கிறார்.

    ஒருவருக்கு எத்தனைதடவை பொதுமன்னிப்பு வழங்குவது ஞானசார தேரர் தன்னை திருத்திக் கொண்டு சமூகத்திற்கு வரவே சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஓஷல ஹேரத் அறியாதவரா? ஞானசார தேரர் செய்யாத குற்றங்கள்போல் இன்னும் 100 ஞானசார தேரர்கள் வெளியே எங்களை சமூகத்துக்கு எதிராக கட்சிதமாகக்கையாண்டார்கள் அவர்களுக்கும் தண்டனை வேண்டும்.

    ஓஷல ஹேரத் கூறுவதுபோல் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கினால் பின்வரும் காலங்களில் ஞானசார தேரர் செய்த குற்றத்தைவிட பெரிய குற்றமா மற்றவர்கள் செய்தார்கள் என ஓஷல ஹேரத் ஒரு கட்டுரை வரைந்து அவர்களுக்கும் மன்னிப்புக்கேட்பார் என்பதில் என்ன நிச்சயம்.

    ReplyDelete

Powered by Blogger.