Header Ads



இலவச இணைய கொடுப்பனவா..? நம்பி ஏமாறாதீர்கள்


இலவசமாக இணைய கொடுப்பனவு வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அனைத்து தொலைபேசி நிறுவனங்களினாலும் இவ்வாறு இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக விளம்பரம் செய்யப்படுகின்றது.


இவ்வாறான விளம்பரங்களின் இணைப்புகளைஅழுத்துவதன் ஊடக சமூக ஊடகக் கணக்கு விபரங்கள் அல்லது அலைபேசி விபரங்களை மூன்றாம் தரப்பிற்கு கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மெசென்ஜர் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தகவல்களில் உண்மையில்லை என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் லிங்குகளை கிளிக் செய்வதனை தவிர்த்துக் கொள்வது பொருத்தமானது என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.