Header Ads



இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சவூதியில் ஆரம்பித்து வைத்த நிகழ்வு


நீண்டகாலம் சவூதி அரேபியாவில் தொழில் புரிந்துவரும், இலங்கை புலம்பெயர்  பணியாளர்களை கௌரவிக்கும் பாரம்பரியமொன்றை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்  அண்மையில் ஆரம்பித்து வைத்தார். 


சவூதி அரேபியாவின் மிகப்பெரும் பன்னாட்டு பால் உற்பத்தி நிறுவனமான அல்மராய் கம்பெனியில் முப்பது வருடங்களுக்கு மேலாக நிதி நிருவாகத்தில் பணிபுரிந்த  சேனாதீர அவர்களை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு, றியாதில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத்,


புலம் பெயர்ந்து வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் பங்குதாரர்களாக இருக்கின்ற அதேவேளை, தங்களின் புலமைகள் மூலம் அவர்கள் தொழில்புரிகின்ற நாட்டின் அபிவிருத்திக்கும் தங்களது சம்பாத்தியத்தின் மூலம் தாய் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். 


பல்லாயிரக்கணக்கான இலங்கையருக்கு தொழில் வழங்கியுள்ள அல்மராய் நிறுவனத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட தூதுவர் அமீர்அஜ்வத், இலங்கையின் மனிதவளத்தில் அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்துக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 


இந்நிகளழ்வின் போது தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் அல்மராய் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 



இலங்கைத் தூதரகம் 

றியாத்

06.07.2024

No comments

Powered by Blogger.