Header Ads



ஜனாதிபதி போடவுள்ள, இறுதித் துரும்பு


இன்றைய -11- ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


2019 ஆண்டிலும், கடந்த திங்கட்கிழமையும் பதவிக் காலம் ஐந்து வருடங்களே என்று தெளிவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், இதை கொண்டு வர வேண்டியதன் தேவை என்ன?  ஜனாதிபதி தேவையில்லாத வேலையையும் தனது கடைசி முயற்சியையும் சூட்சமமாக மேற்கொண்டு வருகிறார். 


ஐந்து நாட்களின் பின்னர் தேர்தல் திணைக்களத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.  அதன் பிற்பாடு தேர்தல் திணைக்களம் தேர்தலுக்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். 


அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இறுதி துரும்பையும் போடுகின்றார். அர்த்தமில்லா வேலை. 


பயம் இல்லை என்கின்றனர். நாடு வழமைக்கு திரும்பி விட்டது என்கின்றனர்.  நற்செய்திகளை கூறினர். அவ்வாறானால் தேர்தலை நடத்த முடியுமல்லவா? 


17 ஆம் திகதி மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க இருந்தனர். கொஞ்சம் பொறுங்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலரை கழட்டிக் கொண்டு வருவேன் என கெஞ்சி அந்த அறிவிப்பை 26 ஆம் திகதி வரை ஜனாதிபதி பிற்போட்டுள்ளார். 


மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தமது அழுத்தங்களை தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். 


தேர்தலை பிற்போட ஜனாதிபதி எல்லா சூழ்ச்சிகளையும் போட்டு வருகின்றனர். 


புண்ணியத்துக்கு கிடைத்த பதவி போதும். மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல வேண்டும். 


ஜனாதிபதியின் Mind Game க்குள் ஐக்கிய மக்கள் சக்தி சிக்கிக் கொள்ளாது.

No comments

Powered by Blogger.