Header Ads



புதிதாக ஒரு மில்லியன் முயற்சியாளர்களை உருவாக்குவேன்


புதிதாக ஒரு மில்லியன் சிறிய, மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது எமது நோக்கமாகும்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச


ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைகிறது. விவசாயம், தொழில் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகளாகும். ஒரு நாடானது தனக்கென உற்பத்தி சுழற்சியைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆடைத் தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்டு இது முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஒரு நாடாக, பொருளாதார வளர்ச்சி பல அம்சங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். சேவைகள், சுற்றுலா, விவசாயம், உற்பத்தி போன்ற பல பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களே அதிக பங்களிப்பை வழங்கி வருவது இப்போது புதிய போக்காக அமைந்து காணப்படுகிறது. பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கிக் கொண்டு, இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை நல்கி வருகின்றனர். எனவே இதனை கருத்திற் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு மில்லியன் புதிய தொழில்முயற்சியாண்மைகளையும் தொழில்முனைவோரையும் உருவாக்குவோம். மூலதனத்தை வழங்கி, சலுகைகளை வழங்கி, தற்போதுள்ள தொழில்முயற்சியாண்மைகளை பாதுகாத்துக் கொண்டு, மேலும் பல புதிய தொழில்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 337 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன,கம்பஹா, கட்டான, மினுவாங்கொட ஹீனட்யன, தம்மாலோக மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.


பராட்டே சட்டத்தை ஒழிப்பதற்கான பயணத்தின் முன்னோடியாக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 4 ஆண்டுகளாக தர்க்க ரீதியாக விடயங்களை முன்வைத்து, பராட்டே சட்டத்தை பின்தள்ளி தொழில் நடவடிக்கைகளை பாதுகாத்துத் தந்தது. பழைய தொழில்கள் பாதுகாக்கப்படுவது போல், புதிய தொழில்களும் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


தகவல் தொழில்நுட்பம் கற்கும் புதிய தலைமுறையினர், தொழில்முனைவோராக மாறி, தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய ஆற்றலை கொண்டவர்களாக மாற்றுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


எனவே, தகவல் தொழிநுட்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துவோம். எமது நாட்டின் திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வேண்டும் என்பதனால், மிக உயர்ந்த தகவல் தொழில்நுட்ப திறன் கொண்ட பணியாளர்களை நாம் உருவாக்க வேண்டும். ஒரேயொரு தொழிலாளர் பிரிவினர் மூலம் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்குப் பதிலாக, முன்னேற்றம் கண்டுள்ள பல்வேறு துறைகளில் இருந்து அந்நியச் செலாவணியைப் பெற்று, பொருளாதாரத்தை படிப்படியாக மேம்படுத்தும் வகையில் புதிய தேசியத் திட்டத்தை வகுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சகல பிரதேச செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குவேன். தகவல் தொழிநுட்பக் கல்வி கட்டாயப் பாடமாக மாற்றப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.