Header Ads



தம்பதிகளளே கொஞ்சம் நில்லுங்கள்...!


இது கணவன் தொழில் விட்டு வீடு வரும் தருணத்தோடு, அல்லது வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு வரும் தருணத்தோடு சம்பந்தப்படும் ஒரு முக்கிய சமாசாரமாகும். 


இத்தகைய சூழ்நிலையில் கணவனின் மனோபாவம் எப்படியென்று மனைவி அறியமாட்டாள், மனைவியின் மனோநிலை  எப்படியென்று கணவன் அறிமாட்டான். 


உதாரணமாக கணவன் தொழில் பார்க்கும் இடத்தில் ஒருவனுடன் நடந்த சண்டையின் பின்னர் பெரும் மன உளைச்சலோடு வீடு திரும்பிருப்பான். அல்லது கடன் கொடுத்த ஒருவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பின்னர் வந்திருப்பான். அல்லது வெளியில் நடந்த ஏதாவது சம்பவவத்தின் பின்னர் மனப் பதட்டத்தோடு வீடு வந்திருப்பான். 


அதே போல் வீட்டில் மனைவியின் மனோநிலையும் மாறுபட்டிருக்கலாம். 


உதாரணமாக பக்கத்து வீட்டார்களுடன் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அல்லது வீட்டில் தனது பிள்ளைகளுடன் ஏதாவது சண்டைகள் ஏற்பட்டிருக்கலாம். 


அல்லது இருவரேமே மனிதன் என்ற அடிப்படையில் ஏதாவது திடீர் மன உளைச்சலோடு இருப்பார்கள், அல்லது யாராவது ஒருவராவது தீடீர் உடல் நலக் குறைவோடு இருக்க வாய்ப்பிருக்கும். 


இந்த சூழ்நிலைகளில் இரு தரப்பினரும் மற்ற தரப்பின் மனநிலையை கண்டறிய சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். நிலைமை சுமூகம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முன்னர் அவனிடன் 'ஏன் அதைக் கொண்டுவரவில்லை', ஏன் இதைக் கொண்டுவரவில்லை' என்று கேள்விகள் கேட்காதீர்கள். அவளிடம் "அதைச் செய், இதைச் செய் என்று வேண்டாதீர்கள். அல்லது மிக முக்கியமான குடும்பத் தலைப்புகளில் நுழையாதீர்கள். 


ஏனெனில் நாம் ஒதுங்கி ஓய்வெடுக்க வரும் வீடுகள் மாத்திரம்தான் எமது உளவியல் மற்றும் உடலியல் உளைச்சல்களை தேற்றுவதற்க ஒரே ஒரு தளமாகும். 


ஆதலால் நாம் நம் வீடுகளில் பரஸ்பரம் ஒருவர் மற்றவர் மனொநிலைகளை புரிந்து நடக்கும் அளவுக்கு ஆனந்தமும் அமைதியும் நிலவும் என்பதை மறவாதீர்கள். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.