ஈரான் புதிய அதிபரின் நிலைப்பாடு - நஸ்ரல்லாஹ்வுக்கு அனுப்பிய தகவல் வெளியானது
பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் 'குற்றவியல் கொள்கைகளை' தொடர அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
"சட்டவிரோதமான சியோனிச ஆட்சிக்கு எதிரான பிராந்திய மக்களின் எதிர்ப்பை இஸ்லாமிய குடியரசு எப்போதும் ஆதரித்து வருகிறது" என்று ஈரானிய ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளன.
"பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலிய போர்வெறி மற்றும் குற்றவியல் கொள்கைகளைத் தொடர இந்தப் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்பு இயக்கங்கள் அனுமதிக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானின் சீர்திருத்த முகாமில் மூத்த பிரமுகர்களின் ஆதரவைப் பெற்ற Pezeshkian, வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாம் தேர்தலில் கடுமையான பழமைவாத சயீத் ஜலிலியை தோற்கடித்தார்.
Post a Comment