மாணவன் கைது - ஏன் தெரியுமா..?
தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 07, பௌத்தாலோக மகா விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்திலிருந்து குறித்த மாணவர் 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொரளையை சேர்ந்த 14 வயது மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
தனது வயதுக்குட்பட்ட காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டையை வழங்குவதற்காக 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காதலி என கூறப்படும் சிறுமியின் தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸார் அழைப்பு எடுத்த நிலையில் உண்மை கண்டறியப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற இளம் வயதினர் செய்யும் தவறுகளை பொலிஸார் மனிதாபினத்துடன் நோக்கி அந்தவகையான செயல்கள் தொடராமல் இருக்க வழிவகை செய்து எச்சரிக்கை செய்து பெற்றோரை அழைத்து அவர்களிடமும் அதை நிதானமாக தெரிவித்து பையன் திருந்தி நடக்கும் வகையில் செயல்திட்டங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறைக்கு அனுப்பவதால் குற்றச் செயல்கள் நிச்சியம் குறைந்து விடாது. இது போன்ற வழிமுறைகளை நிலையத்தின் தலைமைத்துவம் சரியாக வழிநடாத்தல் வேண்டும்.
ReplyDelete