ஜனாஸாக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம், ராஜாங்க அமைச்சரின் கோரிக்கை
மரணம் சம்பவிக்கும் போது முஸ்லிம்கள் தங்களது (ஜனாஸாக்களை) சமய வழிமுறைக்கு அமைய 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த நியமனங்களை மேற்கொள்ளுமாறு அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எழுத்து மூலம் விடுத்துள்ள வேண்டுகோள் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
முஸ்லிம் மக்களின் (ஜனாஸாக்களை) இறுதி கிரியை சடங்குகள் ஏனைய மத சடசங்குகளை போலன்றி 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் பல்வேறு காரணங்களினால் இதனை உரிய காலத்திற்குள் நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை இம்மக்கள் எதிநோக்க வேண்டியுள்ளது. இது நல்லாட்சியின் நெறிமுறை பொறுப்புகளுக்கும் முரணானதாகும்.
எனவே முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் மரபு ரீதியான கடமைகளை எளிதாக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கூடுதல் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க பரிந்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் முடிவு நல்லது போல் தோன்றுகின்றது. ஆனால் இதுவும் ஒரு இலக்ஷன் டிமிக்ஸ் போலத் தெரிகிறது.
ReplyDelete