Header Ads



தாய்லாந்தில் தொழில் - மியன்மாரில் சமூக விரோத வேலைகளில் ஈடுபடுத்தியவருக்கு விளக்கமறியல்


- இஸ்மதுல் றஹுமான் -


    தாய்லாந்து நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு குழுவினரை மியன்மாருக்கு அழைத்துச் சென்று சமூக விரோத வேலைகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டவரின் பிணை மனுவை நிகாரித்த நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரக்கித அபேசிங்க, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தை சந்தேகநபர் அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அடுத்த தவணையில் பிணை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என  தெரிவித்தார்.


     கம்பஹா, அமுனுகுபுர வைச் சேர்ந்த லேக்கம் ஆரச்சிகே நிரோஷன் சசித டிலான் என்பவரே தொடரொந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


  சந்தேக நபர் தொழிலை எதிர்பார்த்து இருந்த 18-24 வயதிற்கு உட்பட்ட 47 இளைஞர்களுக்கு தாய்லாந்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தொழில்களை பெற்றுக்தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் பல இலட்சம் ரூபாய்களை பெற்றுள்ளார்.


    2023.03.27.ல் சுற்றுலா விஸாவில் இவர்களை மியன்மாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


         அங்கு தமக்கு பொறுத்தமற்ற எதிர்பாராத சமூக விரோத வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளாத தெரிவித்துள்ளனர்.


    இதில் ஒன்பது பேர் அந்த நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவித்து அதன் மூலம் இலங்கை வந்துள்ளனர். இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.


      பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டதரணி சக்கல குணதிலக தனது சேவை பெறுனர்கள் சிலர் தமது இருப்பிடங்களை அடகு வைத்தும், மற்றும் சிலர் வட்டிக்கு பணம் பெற்றே இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இக்கட்டான நிலையில் உள்ள இவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொள்ள ஆவண செய்யுமாறு மன்றை கேட்டுக்கொண்டார்.


     குற்றவியல் விசாரணை திணைக்களம் ஒ பொலிஸ் சார்ஜன்களான சமீர (71918), மஹிந்த (26926) ஆகியோர் முறைப்பாட்டளர்கள் சார்பாக கருத்துத் தெரிவித்தனர்.


              சந்தேக நபர் சார்பாக முன்னிலையான சட்டதரணிகள் சந்தேக நபருக்கு இரு சிறு பிள்ளைகள் இருப்பதாகவும் அவரும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல இருந்தவர் இவர்களின் பொய்களால் சந்தேக நபரும் ஏமாந்துள்ளதனால்  தகுதியான பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.


 வழக்கு 23 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது .

No comments

Powered by Blogger.