Header Ads



வங்க தேசத்தில் உள்ள, இலங்கை மாணவர்களின் நிலை


வங்க தேசத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


அந்நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். 

No comments

Powered by Blogger.