மொட்டு கட்சியின் தலைவராக ரணில்
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றும் நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக புதியதொரு அரசியல் கட்சி கட்டியெழுப்பப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நினைவூட்டியுள்ளார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பிக்க பொது மக்கள் பேராதரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு வைக்கும் திட்டம் தமது கட்சிக்கு இல்லை எனவும் குறித்த நடவடிக்கை எதிர்காலத்திலும் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமசிங்க தற்போது மொட்டு கட்சியின் தலைவராக செயல்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வங்குரோத்தடைந்துள்ளதாகவும் இந்த நிலையில், சிறிகொத்தவை கைப்பற்ற வேண்டிய தேவைப்பாடு தமது கட்சிக்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment