9 முஸ்லிம் எம்.பி.க்களா..? எலெக்ஷன் ஜிஹாத் என புலம்பல்
ஆனால் ஒன்பது முஸ்லிம்கள் எம்.பி பதவி வகிப்பதை எலெக்ஷன் ஜிஹாத் என்று சங்க பரிவாரங்கள் புலம்பி வருகின்றனர்..
நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற அவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வடகரா தொகுதியில் போட்டியிட்ட ஷாபி பரம்பில் அபார வெற்றி பெற்றார்.. அதுபோலவே முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மலப்புறம் தொகுதியில் போட்டியிட்ட இ.டி.முஹம்மது பஷீர், பொன்னாணி தொகுதியில் போட்டியிட்ட மவுலவி அப்துல் ஸமது சமதானியும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பிராகினர்...
கேரள மாநிலத்திலிருந்து காலியாகும் ராஜ்யசபா பதவிகளுக்கு சுழற்சி முறையில் சமுதாய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கமாகும்.. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களில் காலியான இடங்களுக்கு வேட்பாளர் அறிவித்ததில் தகுதியும் திறமையும் கட்சிப்பணி அனுபவம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகளின் ஆறு பேர் ஒரே சமயத்தில் ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளனர்..
Adv. A.A றஹீம், இளமரம் கரீம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், பி.பி.சுனீர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும்,
Adv. ஹாரிஸ் பீரான், பி.வி.அப்துல் வஹாப் ஆகியோர் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பிலும்,
Adv. ஜெபி மேத்தர் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் கேரள மாநில பிரதிநிதிகளாக ராஜ்யசபாவில் பணியாற்றி வருகின்றனர்...
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படியும் ஐந்து தொகுதியில் வெற்றி பெற பாஜக பெரும் முயற்சிகள் செய்த போதும் திருச்சூர் தொகுதியில் கிறிஸ்தவ சபைகள் ஆதரவுடன் சுரேஷ்கோபி மட்டுமே வெற்றி பெற்றது சங்க பரிவாரங்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான கோபத்தை அதிகரித்துள்ளது..
சங்க பரிவார ஆதரவாளரான வெள்ளாப்பள்ளி நடேசன் போன்றவர்கள் பகிரங்கமாகவே முஸ்லிம் வெறுப்பை உமிழ்ந்து தங்கள் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினர்..
ஏற்கனவே லவ் ஜிஹாத் துவங்கி வெவ்வேறு வடிவங்களில் வெறுப்பை விதைப்பவர்கள் இப்போது 9 எம்.பி விவகாரத்தை எலெக்ஷன் ஜிஹாத் என்று குமுறி வருகின்றனர்....
கேரள மாநிலத்தில் ஒன்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தமிழக முஸ்லிம் அரசியல் இயக்க தலைமைகள் சிந்திக்க வேண்டிய விஷயம் கூட...
Colachel Azheem
Post a Comment