Header Ads



வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு 800 மில்லியன் ரூபா வரையான பணம் தேவை


2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரையான பணம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் அச்சக மா அதிபர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், "தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம். 


மக்கள் தொகை அதேவேளை, தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும், ஜனாதிபதி தேர்தலானது, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.