காசா குழந்தைகளின் ஈமானிய பலம் - 6 சம்பவங்கள்
⭕பாலஸ்தீன யுத்த களசூழலில் உடலுறுப்புகளை இழந்த நிலையிலும் பிள்ளைகள் குர்ஆனை மனனம் செய்து ஒப்புவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
⭕அல்ஜெசீரா போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால் ஆக்கிரமிப்பு, அநீதி, புதிய உலக ஒழுங்கு குறித்து தன்னம்பிக்கையுடன் பேசுகின்றனர்.
⭕மரணித்த தந்தையிடம் இனி என்னை பஜ்ர் தொழுகைக்கு யார் எழுப்புவாரென.? கேட்டு கதறி அழுகிறான் ஒரு சிறுவன்.
⭕பெற்றோரின் கப்ருகளுக்கு சென்று அவர்களுக்காக அழுதழுது பிரார்த்திக்கின்ற பிள்ளைகள்.
⭕தந்தையை இழந்து, தனது கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தன் தாயாரை முத்தமிட்டு இனி என் தாயை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென சபதமெடுக்கிறான் ஒரு சிறுவன்.
⭕பெற்றோர் ஷஹீதான நிலையில் தனது தம்பி தங்கைகளை பாதுகாத்து பசி போக்குவதற்காக தாகம் தீர்ப்பதற்காக செய்யும் முயற்சியென பாலஸ்தீன பெற்றோர் பிள்ளைகளை வளர்த்துள்ள விதம் வியப்படைய வைக்கிறது.
Post a Comment